Categories
அரசியல் மாநில செய்திகள்

துணிச்சலுனு தம்பட்டம் அடிக்கும் DMK… புயலை கையால் தடுக்க சொன்ன பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, மேயர் பிரியா காரில் தொங்கிக்கொண்டு சென்றது திணிச்சலான செயல் என திமுகவினர் சொல்கிறார்கள். துணிச்சலான செயல் என்று சொன்னால் கடற்கரையிலே சிக்கிக்கொண்ட படகை போய் மீட்டிருக்க வேண்டும் அல்லது புயலை கையால் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இது எல்லாம் வடிவேல் ஜோக்கை விட மிகப்பெரிய ஜோக்காக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

அவர் ஒரு பெண் மேயர், மதிக்க கூடியவர். அப்பேர்ப்பட்டவரை காரில் தொங்கவைத்துக் கொண்டு நடத்துவதை விட்டு, உள்ளே உட்கார வைத்து இருக்கலாமே. ஏற்கனவே அந்த அம்மாவை,  அந்தத் துறையின் அமைச்சர் வா போன்னு பேசுனத நீங்க எல்லாம் கண்டனம் தெரிவித்தீர்கள். நான் உரிமையில் தான் பேசினேன்,  ஒருமையில் பேசல என அமைச்சர் சொல்ற அளவுக்கு பெண்களை மதிக்காத ஒரு அரசாங்கம் திமுக அரசாங்கம். குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களை மதிக்கத் தவறிய ஒரு முதலமைச்சர்.

ஆகவே தான் கண்டனத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி உங்கள் மூலம்  தெரிவித்துக்கொள்கிறது. இதுபோன்ற செயல் இந்திய நாட்டில் எங்கும் பார்த்திருக்க முடியாது. ஒரு மேயருக்கே இந்த நிலைமை. அதிலும் அவர்களின் கட்சி ஏட்டிலே புயலை சந்திக்கின்ற அரசு திராவிட மாடல் அரசு என எழுதுகின்றார்கள். பெண்களை தொங்கவிடுவது தான்  திராவிட மாடாலா? என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |