Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… 9 : 45 மணி நிலவரப்படி திமுக முன்னிலை..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

தற்போது  ஒன்றிய கவுன்சிலர் பதவியில் மாலை 6 மணி நிலவரப்படி அதிமுக முன்னிலையில் வகித்து வந்தது. திமுக 7 இடங்கள் பின் தங்கி வந்த நிலையில் அதிமுகவை முந்திச் செல்லும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில்  09: 45 மணி நிலவரப்படி திமுக முன்னிலை வகிக்கிறது. இரவு முழுவதும் நாளை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது உறுதியாக தெரிகிறது.

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

முன்னிலை நிலவரம்..!

ஒன்றிய கவுன்சிலர் –  2,080/5067

அதிமுக+ – 860

திமுக+ – 1,029

அமமுக – 29

நாம் தமிழர் – 0

பிற கட்சிகள் – 141

Categories

Tech |