திமுக புலி அல்ல பூனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்து அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல் அதிமுக அமமுக மற்றும் பிற கட்சிகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அதிக அளவிலான விமர்சனங்கள் இதுகுறித்து பேசப்பட்டன.
தற்பொழுது இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து கூறுகையில், திமுகவில் பிற கட்சிகளில் இருந்து எத்தனை பேர் சேர்ந்தாலும் எம்எல்ஏ எம்பி போன்ற பதவிகளில் திமுக குடும்பத்தை சேர்ந்த நபர்களே இருக்கின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஸ்டாலின் தொண்டர்களிடையே திமுகவில் இருப்பதே பெருமை என்றும்,புலி பதுங்குவது பாயத்தான் என்றும் கூறி வருகிறார். ஆனால் திமுகவின் செயல்கள் புலி போல் அல்ல திமுக பூனையாகவே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.