நீட் மரணத்திற்கு திமுக தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க கூடிய நிலையில், நீட் தேர்வு தமிழகத்தில் ஆரம்ப கட்டத்தில் வருவதற்கு அடித்தளமாக இருந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
இப்போது வெளிநடப்பு செய்து உள்ளீர்களே அவர்கள் தான் காரணம். நீட் வருவதற்கு காரணகர்த்தா இவர்கள் தான். இவ்வளவு பிரச்சனை வந்தது இவர்களால் தான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வருவதற்கு நீங்கள் கூட்டணி வைத்து உள்ளீர்களே… அவர்கள் தான் நீதிமன்றத்தில் வாதாடி நீட் தேர்வை கொண்டு வந்தார்கள்.
நீங்க கூட்டணியில் இடம் பெற்று, 2010ல நீட்தேர்வு கொண்டு வந்ததன் காரணமாகத்தான் 13 பேர் உயிரிழந்துள்ளார். இதற்க்கு துணை போனது திராவிட முன்னேற்ற கழகம் என்பதை யாரும் மறுக்க முடியாது, வரலாற்றை பிழையை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள். உண்மையான தகவலை மறுக்க முடியுமா ? எதிர்க்கட்சி தலைவர் சொல்லட்டும். யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது ? எப்போது வந்தது ? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? என்று நாட்டுக்கே தெரியும் என்று தமிழக முதல்வர் ஆவேசமாக பேசினார்.