Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK தான் டார்கெட்…. நாடாளுமன்ற தேர்தலில் BJPகூட்டணியா ? டிடிவி பளிச் பதில்

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா இருந்தப்ப கூட்டணி இல்லாம அம்மா ஜெயிச்சாங்க எலக்சன்ல,  அதுதான் முடியாது.  அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால், திமுகவை வீழ்த்தலாம். அம்மா இருந்தா தனியா 2014 ஜெயிச்சாங்க, சின்ன சில கட்சிகளை சேர்த்து  வைத்து ஜெயிச்சாங்க. அது போன்ற நிலைமை இன்றைக்கு இருக்காது, அம்மா பெரிய தலைவர்.

ஆனால் சரியான கூட்டணி அமைத்து,  அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து… தங்களை தொண்டர்களாக சொல்பவர்கள்…  சிலர் மாதிரி பயந்துகிட்டு, தனக்கு பதவி இருக்கணும், தன்னை காப்பாற்றிக் கொள்ள அவன் கிடையாது, இவன் கிடையாது என சொல்லுறவுங்களை பத்தி, நான் சொல்லல. உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து…

ஓர் அணியில் திரண்டு,  திமுகவை வீழ்த்த கூட்டணி அமைத்து போராடினால்,  பாராளுமன்ற தேர்தலில்…  வருங்கால சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று அம்மாவின் ஆட்சி அமைத்து விடும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் அப்படின்னு அவுங்க சொல்றாங்க. அப்பவே அவர்களுடைய பலவீனம் தெரியுது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி,  சட்டமன்ற பொதுத் தேர்தலாக இருந்தாலும், கூட்டணிக்கு தலைமை தங்குவது திமுக, அண்ணா திமுக தான். இப்போ அவுங்க அந்த இடத்தை இழந்து விட்டதால் தான் எங்க தலைமையில் கூட்டணி என்று இவர்களாகவே பதறுகின்றார்கள்.இயற்கையாக இருந்த ஒரு விஷயத்தை, தினமும் கூப்பாடு போட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். டிடிவி தினகரனின் இந்த பேட்டி திமுகவை விழ்த்துவதையே பிரதானப்படுத்துவதால் பாஜக கூட்டணியில் டிடிவியும் இருக்கலாம் என அரசியல் வட்டாரம் தெரிகின்றது.

Categories

Tech |