ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது முகநூல் பக்கமான டிவீட்டரில்; கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த காலத்திலும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல். பதற்றமான சூழலில் மாணவர்கள் எப்படி தயார் செய்து தேர்வு எழுதுவார்கள்? ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் NEET ஐ தமிழக அரசு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.