Categories
மாநில செய்திகள்

பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! – முக ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து!

இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! என்று முக ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Image result for M.K.Stalin kani moli

திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! “இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! பெண்ணே வாழ்க” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Categories

Tech |