சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள அனுபுஜபுரம் தெரு, பெரம்பூர் ரமணா நகர் ஜவகர் தெரு, திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதிகள், கொளத்தூர் தொகுதியில் ரெட்டில்ஸ் சாலையில் உள்ள கிரிஜா நகர் பகுதிகளில் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.மேலும் மக்களுக்குத் தேவையான உதவிகளையும், பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் திமுக நிர்வாகிகள் வழங்கிட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
Categories