திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
ஜூன் 3_ஆம் தேதி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக_வின் மாவட்டச் செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில்மாவட்ட வாரியாக கட்சி வளர்ச்சிப் பணிகள், தொகுதி வாரியாக வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நன்றிக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து போன்ற பணிகள் , இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில் அதற்கான காரணம் குறித்தும் , உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ள சூழலில் அதற்கான பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகின்றது.