Categories
அரசியல் ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்வர் பற்றி அவதூறு பரப்பிய திமுக பிரமுகர்… கொத்தாக தூக்கி சிறையில் அடைத்த போலீஸ் …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய திமுக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . ஆனாலும் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்பப்பட்டு வந்தன. இது போல அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில்தான் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலையை அடுத்துள்ள கூத்தம்பாளையம் பகுதியில் வசித்து வரும் திமுக பிரமுகர் மகேந்திரன் பழனிச்சாமி என்பவர் தனது பேஸ்புக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வந்துள்ளது என தவறான செய்தியை பரப்பி உள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மகேந்திரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சென்னிமலை காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |