Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK மினிஸ்டர்ஸ் சூப்பர்… வசமாக சிக்கிய AIADMK… எடப்பாடியை குறிவைத்த ஆளுநர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய தளபதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று,  பொருத்தமான துறைகளுக்கு பொருத்தமான அமைச்சர்களையும் தேர்வு செய்து, அவரவர்களுக்கு பொறுப்பளித்து, எல்லா அமைச்சர்களுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சன் டிவில 7:30 மணிக்கு ஒரு செய்தி சொல்லுவாங்க. அதை நான் தவறாமல் பார்ப்பேன். காலையில் 7:30 மணி, சாயந்திரம் 6:30 மணி இந்த ரெண்டு செய்தியை கொஞ்சம் தவறாமல் பார்ப்பேன். இன்னைக்கு சாயங்காலம் செய்தி பார்க்கல, இன்னைக்கு காலையில செய்தி பார்த்தேன். ஏற்கனவே ஆளுநராக இருந்தவர். இப்போ ரவி இருக்காருல,  ரவிக்கு முன்னாடி ஒருத்தர் கவர்னராக இருந்தார்.

அப்போ அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல்  கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது,  எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். அவர்கள் தான் ஆளுநர்கள். அவர் அங்க போய் இருக்காரு, அவரு துணை வேந்தர் பதவியில் முறைகேடு, லஞ்சம் என எடப்பாடி மீது பகிரங்க குற்றசாட்டு வைத்துள்ளார் என விமர்சித்தார் .

Categories

Tech |