Categories
அரசியல் மாநில செய்திகள்

தொட்டால் சிணுங்கி கட்டடம்… “ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை”… திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்..!!

ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை என்று திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் கூறியுள்ளார்.

தமிழக சட்ட பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. அப்போது அவர், தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி.. புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டிருக்கிறது.. 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த கட்டடம் 2018ல் தொடங்கப்பட்டு 2019ல் முடிக்கப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறது. கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. புளியந்தோப்பு கட்டட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்..

Categories

Tech |