ரஜினியை படப்பிடிப்பு தளத்தில் திமுக எம்எல்ஏ சந்தித்து மலர் கொத்து தந்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு கடலூர் புதுவை எல்லையான அழகிய நத்தம் தென்பெண்ணை ஆற்றுபாலம் அருகே நடந்து வருகின்றது.
இந்த நிலையில் ரஜினியை புதுவை மாநில பாகூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். ஜெயிலர் திரைப்படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது. புதிதாக போடப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த காட்சிக்கு படம் பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து படக்குழுவினர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமாரிடம் கூறினார்கள் அவர் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பேசி அனுமதி பெற்று கொடுத்தார். இதை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்திருக்கின்றது. ஆகையால் எம்.எல்.ஏ ரஜினியை பார்க்க விரும்பினார். படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் இருந்த ரஜினியை திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.