Categories
மாநில செய்திகள்

பெண் என்பவள் சக மனுஷி… அறிவும் திறனும் பெற்ற சமமானவள்… உலகம் உணரட்டும் – எம்பி கனிமொழி மகளிர் தின வாழ்த்து!

பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும் என்று திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Image result for M.K.Stalin kani moli

இந்நிலையில் திமுக எம்பியும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டதாவது, “தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும். பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |