குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி ட்விட் செய்துள்ளார்..
நாட்டில் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுவது அதிகரித்துவிட்டது.. குடும்பத்தின் வறுமை காரணமாகவும், கல்வியறிவின்மையாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி ட்விட் செய்துள்ளார்.. அதில், நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து வரும் பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கல்வி தான் ஒரு பெண்ணின் விடுதலைக்கும், ஒரு சமூகத்தின் விடுதலைக்கும் வழிவகுக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து வரும் பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். (1/4)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 19, 2021
https://t.co/46e09uSRbO (3/4)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 19, 2021