Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடு புகுந்த மர்ம கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

திமுக நிர்வாகிய தாக்கிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மெயின் தெருவில் ரத்தின சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரத்ன சபாபதி வீடு புகுந்த மர்ம கும்பல் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியுள்ளனர். அதன்பின் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த ரத்தினசபாபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் திமுக உட்கட்சி தேர்தல் முடிவு தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் மற்றும் அவரது தம்பி மகேந்திரனாகியோருக்கும் ரத்ன சபாபதிக்கும் இடையே முன்விரதம் இருந்ததுதெரியவந்துள்ளது. இந்த முன்விரோத காரணத்தால் அவர்கள் இரண்டு பேரும் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன், ராஜேஷ், தாமரைக்கண்ணன், தீனா, மகேந்திரன் மனைவி கவிதா மற்றும் வினோத் ஆகிருடன் சேர்ந்து ரத்தினசபாபதியை தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 8 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |