தி.மு.க பிரமுகர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதியில் தி.மு.க பிரமுகர்களான விஜயராஜ் மற்றும் பாபு மீரான் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவர்களை வழி மறித்துள்ளது. அப்போது விஜயராஜ் அவர்களிடம் இருந்து தப்பித்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மீரானை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த பாபு மீரானை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பெரியகடைவீதி பகுதியில் வசிக்கும் சாதிக் பாஷா, நாகராஜ் உள்ளிட்ட 4 பேர் தி.மு.க பிரமுகர்களை அரிவாளால் வெட்டியது பதிவாகியுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் முகாம் நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 4 பேரும் இணைந்து தி.மு.க பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.