Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட திமுக…. வசமாக சிக்கிய ஓபிஎஸ்…. முக,ஸ்டாலின் பரபரப்பு பேச்சு …!!

திமுக ஆட்சிக்கு வந்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் நேற்று காணொளி மூலம் கலந்துகொண்ட முகஸ்டாலின்: தமிழக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் துணை முதல்வர் என்று ஒருவர் இருக்கின்றார், பன்னீர்செல்வம். உங்க எல்லாருக்கும் தெரியும். அவரை இப்போது எல்லோரும் தியாகி என்று சொல்கிறார்கள். ஏதோ அவரை முதலமைச்சர் பதவி தேடி வந்ததைப் போலவும்,  அதனை அவர் பழனிச்சாமிக்கு விட்டுக்கொடுத்து விட்டதைப் போலவும், அவரை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக கட்சியே தோற்க போகிறது. தோற்கிற கட்சிக்கு பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருக்கட்டும்னு தந்திரமா நழுவிட்டார் பன்னீர்செல்வம், அதுதான் உண்மை, அதனால பன்னீர்செல்வம் தியாகியும் இல்லை, பழனிச்சாமி நிச்சயமாக மீண்டும் முதலமைச்சராக வர வாய்ப்பும் கிடையாது.  நடக்கப்போற சட்ட மன்ற தேர்தல் முடிவு காட்டத்தான் போகின்றது என்று மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலின் கூறும்போது பன்னீர்செல்வம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரை திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி கொடுத்துள்ளார். பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு புகார் லஞ்ச ஒழிப்பு துறைக்கு முதல்ல கொடுத்தோம். அவுங்க விசாரணை நடத்த வில்லை. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினோம். பன்னீர்செல்வம் மாநில அமைச்சர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்து, தனது குடும்பத்தினர், உறவினர்கள், பினாமிகள் பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார். போலி நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். சேகர் ரெட்டி மூலமாக சட்டவிரோதமாக பலன் அடைந்த பல நபர்கள் பட்டியலில் ஓ பன்னீர்செல்வம் பெயரும் இருக்கின்றது.

பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தது. இந்த வழக் விசாரணை வந்தபோது இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். நாங்களே வழக்கு பதிவு செய்து ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சொல்லிச்சு. இன்னமும் இந்த புகார் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையை தான் இருக்கின்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு மீது முழு வேகத்தோடு விசாரணை நடத்தப்படும். இப்படிப்பட்டவர் தான் இப்போது துணை முதலமைச்சராக இருக்கின்றார் என்று மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |