கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த போது விவசாயிகளுடன் சேர்ந்து பாஜகவும் தீவிரமாக போராடியதுதான் விளைவாக தான் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொடுத்தது. அதன் பிறகு அண்ணாமலைக்கும் திமுகவில் இருக்கும் ஊழல்வாதிகளுக்கும் மட்டும் தான் பிரச்சினையே தவிர, திமுகவில் உள்ள தனி நபர்களுக்கு கிடையாது. எனக்கு ஆ. ராசா உண்மையாகவே மத்திய அமைச்சராக இருந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆ. ராசா பத்திரிகையாளர்கள் முன்பாக பச்சை பொய் சொல்லிக் கொண்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மைகளும் நடைபெறவில்லை.
பிரான்சில் புரட்சி வெடித்த போது அங்கு எப்படி ஆட்சி இருந்ததோ அதேபோன்றுதான் தற்போது திமுகவின் ஆட்சியும் இருக்கிறது. காலையில் எழும் போது எந்த பொருளின் விலை உயருமோ என்ற அச்சத்தில்தான் மக்கள் இருக்கிறார்கள். ஆவின் நிறுவனத்தை பொறுத்தவரை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு அதாவது அடிமாட்டு விலைக்கு பால் வாங்கி மக்களிடம் குதிரை விலைக்கு விற்பனை செய்கிறார்கள். திமுக குடும்பத்தில் சம்மந்தம் செய்துள்ள ஒருவர் புதிதாக பால் பண்ணை தொடங்கியுள்ளார். ஆவின் நிறுவனத்தை முடக்கி தனியாருக்கு சாதகமாக விலையை உயர்த்துவது தான் திமுகவின் ஒரே நோக்கம். மேலும் ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பால்விலையை திமுக உயர்த்தி வருவதால் விற்பனை கடுமையான அளவுக்கு சரிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.