முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தான புத்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இங்கே அண்ணன் திரு.கரு பழனியப்பன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்… பெரியார் என்ற மாடல் முடிந்து விட்டது, அது இனிமேல் வருவதில்லை, ஆனால் பெரியாருக்கு அடுத்து பேரறிஞர் அண்ணா மாடல் வந்தது, அதுவும் முடிந்து விட்டது.
அதற்குப் பிறகு கலைஞர் என்ற மாடல் அதுவும், முடிந்துவிட்டது. இப்போது இவர்கள் எல்லாருடைய மாடலும் சேர்த்து பெரியார், அண்ணா, கலைஞர் அனைத்தையும் சேர்த்து ஒரே மாடலாக, அத்தனை மாடலுடடைய கலவையாக… நம்முடைய தலைவர் அவர்கள் ஒரு சிறந்த திராவிட மாடல் ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டு… நாம் சொல்ல வேண்டுமென்று அவசியமில்லை, எதிர்க்கட்சிக்காரர்களே பாஜகவை சேர்ந்தவர்களே அதற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்கள், ஒரே வார்த்தைதான் ஸ்டாலின் கருணாநிதி விட பயங்கரமானவர் என்று. நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.. அது நம்முடைய தலைவர் அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.
என்ன என்னமோ சொன்னார்கள் ? ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை எல்லாத்தையும் சொன்னார்கள். எல்லாரையும் ஓரமாக உக்கார வைத்துவிட்டு, எப்படி ஒரு நல்லாட்சியை நடத்த வேண்டும் என ஆட்சி செய்கின்றார். கரு. பழனியப்பன் அவர்கள் சொன்னார்கள் அல்லவா… கண்டிப்பாக அடுத்த முறையும் அமையும் போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான், அதை யாராலும் தடுக்க முடியாது.
ஆனால் அதற்காக நாமெல்லாம் ஒத்துழைக்க வேண்டும், தலைவர் அவர்கள் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தலைவர் அவர்கள் பல்வேறு முறை கோரிக்கை வைத்திருக்கிறார். நம் மக்களிடத்தில் இந்த நல்லாட்சியை… நம்முடைய நலத்திட்டங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும், அதற்கு அத்தனை பேரும் உதவ வேண்டும் என்று கூறினார்.