Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை.. நடிகர் அஜித்தே சாட்சி.! அமைச்சர் ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்..!!

திமுக ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரம்  இல்லை என்றும் அதற்கு உதாரணம் நடிகர் அஜித் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீது அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதாக அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர்,

Image result for minister jayakumar and ajith

கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது என்றும், ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் மேடைப் பேச்சுக்கு கூட சுந்தந்திரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு உதாரணமாக நடிகர் அஜித்குமார் ஒருமுறை நிகழிச்சிகளில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டுமென அரசியல் கட்சிகள் கட்டாயப்படுத்துகின்றன என பொது மேடையில் வெளிப்படையாக பேசினார்.

Image result for ajith speech against dmk

இதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினார். வெளிப்படையாக பேசியதால் தான் நடிகர் அஜித் விமர்சனத்திற்கு உள்ளானார் என்றும், பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார் என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக கருத்து சுதந்திரத்துக்கு பெயர் போனதென்றும், அதிமுகவை போல் கருத்து சுதந்திரம் யாரும் அளித்ததில்லை என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |