Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி போய்டும்… 46அம்மாவாசை தான் இருக்கு..! C.Mபொறுப்பை கேட்ட எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கிட்டத்தட்ட 14 அமாவாசை போய்விட்டது, 60 அம்மாவாசையில் 46 அமாவாசை தான் இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே, 46 ஆவது கூட இல்லை, அண்ணன் இருவரும் சொன்னார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் பார்க்கப் போகிறோம். மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது நாடு.

இன்றைய தினம் ஸ்டாலின் என்ன சொன்னார் ? எங்களுக்கு கடிதம் எழுதுகிறார், போதை பொருளை தடுப்பதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று… கேவலமாக இல்ல, கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எப்படி செய்ய வேண்டுமோ, அப்படி செய்தால்….  அதை கட்டுப்படுத்த முடியும். நான் சட்டமன்றத்தில் பேசினேன்…

பத்திரிக்கையின் வாயிலாக தெரிவித்தேன், பல கூட்டத்திலே பேசினேன். போதைப்பொருள் தமிழகத்தில் தாராளமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்துங்கள் என்று… உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்களும் மாணவர்களும் போதைப் பொருள்களால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த போதைபொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லி….  அப்போதெல்லாம் கண்டுகொள்ளவில்லை, இப்போது ஸ்டாலின் நம்முடைய ஒத்துழைப்பு தேவையாம்.

நாம் என்ன கஞ்சா விற்கிறோமா ? ஒத்துழைப்பு கொடுப்பதற்கு… நீங்கள் போதை பொருளை கட்டுப்படுத்து, எங்கே போதைப்பொருள் இருக்கிறதோ அதை கண்டுபிடித்து அதன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால்….  நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாம். அப்புறம் எதற்கு காவல்துறை இருக்கிறது ? நீங்கள் எதற்கு முதலமைச்சரே தேவையில்லை. எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். செயலற்ற முதலமைச்சர் தகுதியற்ற முதலமைச்சர் என கூறினார்.

Categories

Tech |