உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை கையில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் பிள்ளையார் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவுசெய்வது என்பது இதுவே முதல்முறை ஆகும். திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாளராக இருந்தபோது 2014இல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது திமுகவிற்கு எதிராக தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான கட்சி உள்ளிட்ட குற்றச்சாட்டு மற்றும் பல்வேறு பரப்புரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பதிவு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகின்றது.