50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவமனை படிப்புகளில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் விசாரணையில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஏற்கனவே திராவிடர் கழகம் தரப்பில் திராவிடர் கழகம், திமுக, அதிமுக, மதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் இன்று திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பையா தலைமையிலான அமர்வில் புதிய முறையீடு செய்தார். அதில் சம்மந்தப்பட்ட வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருப்பதாகவும், உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் மூலமாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கு நாளை நீதிபதி சுப்பையா அமர்வில் விரசனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.