செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்குது. அதனால மத்திய அரசு 89 கோடிக்கு பேனா சின்னம் அமைக்க அனுமதி கொடுக்கிறாங்க. இது எல்லாம் நடக்கிறது தானே. இந்த மாதிரி காய்ச்சல் பரவுவது அப்படிங்கற செய்தியையே வெளியே சொல்லாதீங்க அப்படின்னு சொல்றாங்க.
மருத்துவமனையிலேயே நமக்கு எடுத்து சொல்றாங்க. இந்த மாதிரி காய்ச்சலை வெளியில் சொல்ல வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க. கொடூரமான காய்ச்சலின் தம்பிகள் எல்லாரும் இருந்தாங்க. இந்த காய்ச்சலால் அவ்வளவு பெரிய உடல் வலி வருதுன்னு சொல்றாங்க.
இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க தொடர் சங்கிலியை அறுக்கணும். அறுக்கணும் அப்படின்னா.. புதுச்சேரியில் எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்டுட்டாங்க. அதே மாதிரி நம்ம அரசு நடவடிக்கை எடுக்கணும். கொஞ்சம் கவனமா அரசு வேலை செய்யணும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா நேரத்துல கண்டுக்கல. அரசு மருத்துவமனையில் தான் நம்ம போய் பார்த்தோம்.
இன்னும் நாம தரம் உயர்த்தனும். அரசு மருத்தை தரம் உயர்த்துவதில் கவனம் செலுத்தனும். இந்த காய்ச்சல் பேரிடர் மாதிரி இருக்கு. இந்த மாதிரி காலங்களில் கூட சரியான மருந்துகளை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை என்றால் ரொம்ப கஷ்டம் என தெரிவித்தார்.