மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திமுக சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் எப்போதுமே உறுதியுடன் திமுக துணை நிற்கும். கொரோனா பேரிடராலும் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 101வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது, இந்த மே தினத்தின் போற்றத்தக்க சிறப்பம்சமாகும் எனவும் கூறியுள்ளார். ஆளுங்கட்சி என்றாலும் எதிர்க்கட்சி என்றாலும் எப்போதும் தொழிலாளர்களின் நலன் காக்கும் இயக்கம் திமுக என புகழாரம் சூட்டினார். முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலக மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை கூறினார்.
அவர் தெரிவித்ததாவது, ” உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என கூறினார். கடினமாக உழைப்பால் வீட்டையும், நாட்டையும் தொழிலாளர்கள் உயர்த்துகின்றனர்” என தெரிவித்தார்.