மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றது.
சென்னை ஐஐடி மாணவி பார்த்திபா தற்கொலை வழக்கில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக ஐஐடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது திமுக மாணவரணி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திமுக மாணவர் அணி மாநில துணை செயலாள தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர் மரணத்தை உடனே தடுக்க வேண்டும் , மாணவி பாத்திமா மரணத்திற்கு காரணமான பேராசிரியர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தற்கொலை_க்கு விசாரணை குழுவை அமைத்து மாணவிகளின் பிரச்சனையை கேட்டு அறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக மாணவரணி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதற்கு முன்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்று வாருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது . மேலும் போராட்டம் நடத்துபவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.