Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

18 நபர்கள் வாபஸ்…. போட்டியின்றி தேர்வு…. மகிழ்ச்சியில் வேட்பாளர்கள்….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகராட்சியில் 116 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 13 நபர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 17-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த கீதாநந்தகுமார் மற்றும் 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த தி.மு.க வேட்பாளரான செல்வம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |