திமுக சார்பாக மாமனார் மற்றும் மருமகள் அடுத்தடுத்த வார்டுகளில் களமிறங்கியிருப்பது, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அத்தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காட்டுமன்னார் பேரூராட்சி தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கிறது.
அதன்படி அங்கு மொத்தமாக 18 வார்டுகள் இருக்கிறது. தலைவர் பதவி பொதுவானது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தி.மு.க சார்பாக புது முகங்களாக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு களமிறக்கப்பட்டவிருக்கிறார்கள். இதில் திமுக நகர செயலாளரான முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி பதினேழாம் வார்டில் மீண்டும் களமிறங்குகிறார்.
இவரின் மருமகளான ஆனந்தி வசந்த், 15-ஆம் வார்டில் களமிறங்கியுள்ளார். திமுக சார்பாக மாமனாரும் மருமகளும் அடுத்தடுத்த வார்டுகளில் களமிறங்கியிருப்பது, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எனினும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கோட்டையில் திமுக போட்டி போட்டு சீட்டுகளை வழங்கியிருப்பது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.