Categories
அரசியல் மாநில செய்திகள்

டயலாக், வீரவசனம் பேசிய திமுக..! டெல்லி ரூம்ல பம்மிட்டு… அண்ணாமலை பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு ஒரு மாநிலத்தினுடைய நிதிநிலை அறிக்கையை பார்க்கிறோம். இங்கிருந்து 25 ஆயிரம் கோடி மத்திய அரசினுடைய டிஸ்காமுக்கு பணம் கொடுக்க முடியல. அடுத்த வருஷம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி தமிழ்நாடு கடன் வாங்காமல் பட்ஜெட் போட முடியாது. எல்லா சுமையையும் மத்திய அரசின் தலையில் சுமத்துகிறீர்கள். எங்கிருந்து மோடிஜீ  பணம் கொடுப்பார் ? பத்திரிகை முன்னாடி தமிழகதுல வீரவசனமாக டயலாக் எல்லாம் பேசுறீங்க.

டெல்லி போனதும் ரூம்குள்ள சொல்றீங்க.  எங்ககிட்ட நிதி இல்ல,  காப்பாத்துங்கன்னு. எப்படி ஒரு பிரைம் மினிஸ்டர் இந்தியாவில் இருக்கக்கூடிய 30 மாநிலத்தை எப்படி காப்பாத்துவாரு ? ஒரு ஒரு மாநிலத்தின்  நிதிநிலை அறிக்கை ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.  ஒவ்வொரு எலக்சன்லையும் நீங்க இப்படித்தான் ஆட்சிக்கு வரணும் என  நீங்க ஆரம்பிச்சீங்கன்னா யார் வந்து ஒவ்வொரு மாநிலத்தை காப்பாற்றுவாங்க என்கிறது தான் பிரைம் மினிஸ்டர் உடைய பாயிண்ட்.

இந்த இலவசகளால் குறிப்பாக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நிறைவேற்ற முடியாத பொய்க்கிறவர்களால் ஜனநாயகம் சீரழிந்து கொண்டிருக்கிறதை நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதனால் நான் வந்து ஒரு கட்சியினுடைய தலைவராக,  தேசிய தலைவர் சொல்வதை இந்த நேரத்துல நான் சொல்வது சரியாக இருக்காது,  இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |