Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு பயந்து நடுங்கிய திமுக…  இப்போலாம் பயம் போய்டுச்சு … காலரை தூக்கிவிட்ட கே. டி. ராஜேந்திர பாலாஜி ..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற வரை பயந்து நடுங்கி இருந்த திமுக இன்றைக்கு பயமில்லாமல் எல்லா தப்பும் செய்கிறார்கள், துன்பம் தாங்க முடியாமல் வேறு வழி இல்லாமல், டென்ஷன் ஓவரா ஆகிட்டுன்னு டாஸ்மார்க் சென்று மது அருந்தினால் அதுவும் ஏற மாட்டேங்குது, அதுலயும் போலி. என்னிடம் சாப்பிட்டவர்களே சொல்கிறார்கள்.

என்னய்யா உங்க ஆட்சியில் கட்டிங் அடிச்சாலே கிச்சுன்னு ஏறிடும். இப்போ மூணு ரவுண்டு அடிச்சு பார்த்தேன், எற மாண்டேங்குது என சொல்லுறாங்க.இது  அரசின் சரக்கு கிடையாது, ஒரிஜினல் சரக்கு கிடையாது, செந்தில் பாலாஜி கரூரில் ஆலை போட்டு தயாரித்த சரக்கு.

பாட்டிலு மட்டும் அழகா இருக்கு.ஆனால் சரக்கு சரியில்ல. அவன் சொல்லுறான், 100 ரூபாய்க்கு ஒரு கட்டிங்க அடிச்சுட்டு, வீட்டுக்கு போய்டுவேன், 600,700 ரூபாய் சம்பளம் வாங்குறேன். 100 ரூபாய், 150 ரூபாய் செலவு செஞ்சுட்டு, போயிருவேன். இந்த ஆட்சியில் நிம்மதியாக குடித்துவிட்டு படிக்கலாம் என்று நினைத்தாலும், அதுக்கும் வழி இல்லை, அங்கேயும் பிரச்சனை என விமர்சித்தார்.

Categories

Tech |