மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது என திமுக MP கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.
மேலும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் சென்னை வந்த திமுக MP கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை மத்திய அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்றும்,8 வழி சாலை உட்பட மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்று அவர் தெரிவித்தார்.