Categories
அரசியல்

ஒருநாளும் அழிக்க முடியாது…. “திமுக பிளே பாய் பரம்பரை” அமைச்சர் விமர்சனம்….!!

திமுக பரம்பரையே பிளேபாய் பரம்பரை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் என்பவர், கமலாயம் சென்று பாஜக தலைவர்களை சந்தித்து வந்ததையடுத்து,  திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கு.க.செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கு.க.செல்வத்திற்கு  சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என சாக்லேட் பாய் தெரிவிக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளித்த  உதயநிதி,  என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ப்ளேபாய் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது மீண்டும் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உதயநிதி ஸ்டாலின் என்னை  பிளேபாய் என்று கூறியுள்ளார். நான் பிளேபாய் அல்ல, திமுக பரம்பரையே ஒரு பிளேபாய் பரம்பரைதான் என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுக என்ற ஆலமரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆலமரம் ஒருநாளும் அழியாது என்று கூறியுள்ளார். 

Categories

Tech |