அதிமுக தொடங்கி 50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கிராமத்தில் ஏழை பெண் தொழிலாளி 100 நாள் வேலை திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள் உயர்த்தினார்களா ? இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்ற அந்த தொழிலாளிக்கு ஊதிய உயர்வு உயர்த்தினார்களா ? இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை.
அதோடு கைத்தறி நெசவாளருக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் உயர்த்தப்பட்டதா ? இல்லை. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 750 யூனிட் விலையில்லா மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டா உயர்தரன்னு சொன்னாங்களே உயர்த்துனாங்களா ? மாதந்தோறும் மின் கணக்கீடு செய்வோம்னு சொன்னாங்க செஞ்சாங்களா ? இல்லை. செய்யாட்டி பரவாயில்லை, இன்றைக்கு என்ன நிலைமை ?
அருமை சகோதரர் தங்கமணி அவர்கள் பேசும்பொழுது குறிப்பிட்டார்.. மின் கட்டண உயர்வு. 12ல் இருந்து 53 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள். 53 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்து இருக்குது. அது மட்டுமல்ல வருடம் 6 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று இன்றைக்கு அரசு தெரிவித்து இருக்கின்றது. அப்படி என்றால் நான்கு ஆண்டுகளில் இப்பொழுது இருப்பதை விட கூடுதலாக 24 சதவீதம் உயர்த்தப்படும்.
இப்பொழுது மின் கட்டணம் செலுத்த முடியல, மின் கட்டண உயர்வால் மேலும் வருடம் வருடம் ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டால், எப்படி மின்கட்டணம் செலுத்துவது ? ஆகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே.. அறிவிக்கப்பட்ட அத்தனை அறிவிப்பும் வெற்று அறிவிப்பு. முதல் போனஸ் மின் கட்டண உயர்வு கொடுத்துட்டாங்க.
இரண்டாவது போனஸ் சொத்துவரி. வீடுகளுக்கு பேரூராட்சி – நகராட்சி – மாநகராட்சியிலே வீடுகளுக்கு 100% வரி உயர்வு. இப்போ நீங்க 5000 ரூபா கட்டினா, பத்தாயிரம் ரூபாய் கட்டணம் கட்டணும். கிராமப்புறத்தில் ஏற்கனவே ஒரு குத்து மதிப்பா, வீடுகளுக்கு எல்லாம் ஊராட்சியில் வீட்டு வரி செலுத்திக்கிட்டு இருந்தோம். இன்றைக்கு அங்கேயும் இந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சி மூலமாக வீட்டு வரியும் உயர்த்திருக்காங்க.
கான்கிரீட் வீடா இருந்தா ? ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய். ஹஸ்பெட்டாஸ் அட்டை போட்டு இருந்தா ? ஒரு சதுர அடிக்கு 60 பைசா. ஓட்டு வீடா இருந்தா ? 50 பைசா. குடிசை வீடா இருந்தா? 30 பைசாவரி. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அந்தந்த பஞ்சாயத்துகளில் கூரை வீட்டுக்கு ஒரு 20 ரூபாய், 25 ரூபாய் போடுவாங்க. ஓட்டு வீட்டுக்கு 50 ரூபா போடுவாங்க.
ஹஸ்பெட்டாஸ் அட்டை போட்டு இருந்தா ஒரு 100 ரூபாய் போடுவாங்க, கான்கிரீட் வீடு கிராமத்தில் இருந்தா ? ஒரு 300 ரூபாய், 400 ரூபாய் போடுவாங்க. இன்றைக்கு அதெல்லாம் மாறுபட்டு விட்டது. எல்லாம் அளவு போட்டு… நான் சொன்ன மாதிரி வீட்டு வரியை இன்றைக்கு வசூல் செய்கிறார்கள் என தெரிவித்தார்.