Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவின் ஆக்சிசன் சிலிண்டர்… மூக்குல வச்சுக்கிட்ட கம்யூனிஸ்ட்கள்… பொளந்து கட்டிய அண்ணாமலை….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கம்யூனிஸ்ட் கட்சிகளோ, திமுகவினுடைய பி. டீமாக  திமுக கொடுக்கின்ற ஆக்சிஜனின் உயிர் வாழக்கூடிய சில தலைவர்கள்,  தன்னுடைய இருப்பிடத்தை காட்டுவதற்காக ரஜினி அவர்களை விமர்சித்திருக்கிறார். ரஜினி அவர்கள் சொன்னதில் என்ன தவறு ? ஆளுநர் கூப்பிடுகிறார்,அரசியல் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள், இந்திய அரசியல்,  தமிழக அரசியல் குறித்து கேட்கிறார். அரசியல் என்றால் ஏன் பிற்போக்குத்தனமாக யோசிக்க வேண்டும்,

அரசியல் என்றால் ஏன் ஒரு மனிதனை தப்பாக பேசுவதற்கு அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?அரசியல் இல்லாத வாழ்க்கையை காட்டுங்கள். இன்றைக்கு படகில் செல்கிறோம். அதற்கு டீசல் மானியம் வருகிறது அது அரசியல் தானே, அந்த படகிற்கு 80% மத்திய அரசு மானியம் கொடுக்கிறார்கள், அது அரசியல் தானே, இதை முடித்துவிட்டு அரசு பேருந்தில் செல்கிறோம்…  மகளிர்க்கு இலவச பிங்க் பேருந்து என்று சொல்லியிருக்கிறார்கள்.

அது அரசியல் தான். அரசியல் என்றால் எதற்காக தவறாக இரண்டு மனிதர்களை திட்டுவதை மட்டும் அரசியலாக பார்க்கின்றீர்கள்?ரஜினி அவர்கள் நான் அரசியல் பேசினேன் என்று கூறுவது, சமுதாயத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை பேசினேன் என்பது தான் அர்த்தம். அதில் அவர்கள் எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். மத்திய அரசினுடைய திட்டங்கள்,  மாநில அரசுகள் செய்யக்கூடிய பணிகளை சொல்லி இருக்கலாம், ரஜினி அவர்களே மாநில அரசினுடைய செஸ் ஒலிம்பியாட்டுக்கு சென்று வந்திருக்கிறார். இது எல்லாம் அரசியல் தான் அதைப்பற்றி பேசி இருக்கலாம்.

இதனால் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலை இல்லை. திமுக கொடுக்கக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிலே சுமந்து கொண்டு, அதை மூக்கு வைத்துக்கொண்டு உயிரோடு சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அரசியல் என்றாலே, ஓஹோ  நம்மளைப் பற்றி தவறாக கூறியிருப்பார்கள் என்று, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும், ஊழல் செய்தவர்களுக்கு குறுகுறுக்கும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். யாரெல்லாம் அரசியலில் தப்பு செய்துள்ளார்களோ,  அவர்கள்தான் முதலில் பேசுகிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |