8000 வாக்குகளை வாங்க திமுக ரூ 125 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக_வின் வெற்றி குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் , வேலூர் தேர்தலில் 8000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள திமுக இந்த வாக்கை வாங்க 125 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். திமுக வெற்றி பெற்றது மோசமான வெற்றி , மோசடியான வெற்றி. எங்களை பொறுத்தவரை மக்கள் மனதில் நாங்கள் முழுதாக இடம்பெற்றுள்ளோம். பாராளுமன்ற தேர்தல் முடிந்த சில காலத்தில் இந்த மாற்றம் திமுக_வுக்கு தேய் பிறையாக தான் போய் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு வளர்பிறையாக இருக்கின்றது. நிச்சயமாக 2021 எங்களின் வெற்றி அமையும்.