Categories
மாநில செய்திகள்

DMLT படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அவ்வபோது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நில அளவையர், கள ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு துறையில் உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமான முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-2 பணியிடத்திற்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 31 பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் DMLT படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களின் வயது வரம்பு 18 முதல் 59 வயது குள் இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து விண்ணப்பத்தினர் தபால் மூலம் முதல்வர், மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரி, திருப்பூர் 641-608 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது மின்னஞ்சல் [email protected] என்ற முகவரிக்கு நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுபவர்கள். அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிடத்திற்கு ஊதியமாக மொத்தம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது, பணி நிரந்தரம் செய்ய மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |