Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும்…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதை இப்போது அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பும் எந்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 வீஏஓ தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமும், குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற மே மாதம், குரூப்-3 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் சந்தேகங்கள் மற்றும் தேர்வுக்கான பாடத் திட்டத்தை www.tnpsc.gov.in இந்த என்கின்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பின் அடிப்படையில் அடுத்த ஆண்டு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |