தமிழகத்தில் முதியோர் உள்ள வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பு தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 50 ,60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களையும் எளிதாக்குகிறது. எனவே நம் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கொரோனா வந்தால் கூட அவர்களை ஒதுக்கி விட முடியாது. அவர்களை நாம் பாதுகாத்து தான் ஆக வேண்டும். அவர்கள் மூலமும் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.
எனவே அவர்களைக் காக்கும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ,தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள முதியோர்களுக்கும், ஐவ மெக்டின் என்ற மாத்திரை வழங்கப்பட உள்ளது. இது ஒரு ஒற்றுண்ணி வகையைச் சேர்ந்த மாத்திரை. இது வைரஸ்கள் பெருகும் எண்ணிக்கையை சீராக குறைக்கும். மேலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே இந்த மருந்து அனைத்து முதியோர்களுக்கும் வழங்கப்படுவதுடன் முதியோர்கள் இருக்கும் வீட்டின் வாசலில் இங்கே முதியோர்கள் இருக்கிறார்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படவும் உள்ளது. வெளியில் இருந்து வீட்டிற்கு வருபவர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.