ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்த முக்கிய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஆண்ட்ராய்டு மொபைலை பொருத்தவரையில், பிளே ஸ்டோரில் பல செயலிகள் பணம் கொடுத்தால் மட்டுமே சரியாக இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும். அந்த வகையான செயலிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் ஏராளமாக இலவசமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இலவசமாக நல்ல செயலிகள் கிடைக்கிறதே என்ற ஆசையில் மக்கள் அந்த செயலிகளை டவுன்லோட் செய்து விடுகிறார்கள்.
அப்போது அதனை இன்ஸ்டால் செய்யும்போது unknown source என்ற வார்த்தை வரும் . இதனை நம் மக்கள் ஆன் செய்து அந்த செயலியை இன்ஸ்டால் செய்வார்கள். தற்போது இது குறித்து காவல்துறையினர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் , மேற்கண்டபடி Unknown Source என்று வந்தால், அந்த செயலி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால் மொபைலில் உள்ள வங்கிகணக்கு உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் திருடப்பட்ட வாய்ப்புள்ளது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.