மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முகமது அலி என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சவுதி அரேபியாவில் இருக்கும் தம்மம் பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 3ம் தேதி தனது மனைவி மற்றும் மகளை தம்மமில் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் மும்பைக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஷேக்கின் மனைவி தனது முகநூல் பதிவு மூலமாக தனது கணவர் சலீம் மூன்று தலாக் என்று உச்சரித்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தலாக் உச்சரிப்பதன் மூலமாக விவாகரத்து செய்வதை தடை செய்வதற்காக இயற்றப்பட்ட இஸ்லாமிய பெண்கள் சட்டம் 2019 கீழ் ஷேக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மும்பையில் இருந்து ஷேக் உடுப்பி வந்த பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்து பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.