ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை கேட்டு பெற்றோர்களிடம் நிர்பந்திக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை தடுப்பதற்காக மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில், தற்போது தான் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே காலம் கடக்க மாணவர்களுக்கு கல்வி ரீதியான பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் முடிவு செய்தன. தற்போது தனியார் பள்ளிகள் அதற்கான வேலைகளை தொடங்கி விட்டன. தற்போது 2019-20 மற்றும் 2020-21ம் கல்வி ஆண்டிற்கான கட்டண தொகையை செலுத்த கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு கல்வி கட்டணம் கேட்டு பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நிர்பந்திக்க கூடாது மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.