இனி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு இ பாஸ் வழங்கக்கூடாது என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 5வது கட்டநிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த சமயத்தில், ஊராடங்கை கடுமையாக பின்பற்றி விட்டு, பின் பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் தளர்வு ஏற்படுத்தியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 10,000 வீதம் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்து ஆலோசித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சென்னையில் இருந்து வருபவர்களால் கொரோனா அதிகரித்ததை கருத்தில் கொண்டும்,
இனி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் யாருக்கும் இ பாஸ் வழங்க கூடாது என்றும், அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து யாரேனும் இ பாஸ்க்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கும் இ பாஸ் வழங்க அனுமதி அளிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.