சென்னையில் முழுஊராடங்கு என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டத்தில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட தொடங்கியுள்ளன.
ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் கொரோனா பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்ற தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முழு ஊரடங்கு என்ற தலைப்பில் வேகமாக பரவி வருகிறது.
அதுவும் வருகின்ற திங்கள்கிழமை முதல் அது கடைபிடிக்கப்படும் என்றும், தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போதைக்கு அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை எனவும், அது குறித்த ஆலோசனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு விதிக்கப்படும் என தவறான செய்திகளை பரப்பி வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் எச்சரித்துள்ளார்.