உடற்பயிற்சி கூடங்களில் முக கவசம் அணிவது மருத்துவரீதியாக ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் பல செயல்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் உடற்பயிற்சி கூடங்கள் வருகின்ற 10ம் தேதி முதல் செயல்பட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருருந்தார்.
இதன்படி, உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ள கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதன்படி, பொது இடங்கள் என எங்கு சென்றாலும், அங்கே முக கவசங்களை கழட்டாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான அறிவுரை. ஆனால் உடற்பயிற்சி கூடங்களில் முக கவசம் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது என்பது சாத்தியமா ? என்ற கேள்வி பலரிடமும் எழுந்து வந்தன.
இதற்கு மருத்துவர்கள் தற்போது இது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஜிம்களில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது சுவாசத்தின் வேகம் அதிகரிக்கும். கவசம் அணிந்திருந்தால் வேகமாக சுவாசிக்க முடியாது. இதனால் மூச்சுத் திணறும். நுரையீரலுக்குச் செல்லும் காற்றில் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் உடற்பயிற்சியின்போது முக கவசம் அணிவது மருத்துவரீதியாக ஆபத்தான ஒன்றாகும் என தெரிவித்துள்ளனர்.