கல்லூரி தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து அமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில், கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக யுஜிசி தரப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டபோது ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வு நடத்தலாம். ஒருவேளை ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வை நடத்த முடியாத சூழல் இல்லாத மாநிலங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வை நடத்தி விட்டு,
முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் அவர்களுடைய இன்டர்ணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம் என்று ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை கூறியிருந்தார்கள்.இதனை தமிழகத்தில் செயல்படுவதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றதா ? அப்படி செயல்படுத்தினால் என்னென்ன சிக்கலை சந்திக்க நேரிடும் ? என்பதையெல்லாம் ஆலோசித்து முடிவுகளை எடுப்பதற்கு இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதே போல பல கல்லூரிகளில் கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இப்போதைக்கு கல்லுரி திறப்பு குறித்து முடிவெடுக்க முடியாது. அதனால் கல்லூரி தேர்வை தற்போது நடத்த வேண்டிய ஒரு சூழல் இருக்கிறதா ? அல்லது மாணவர்களுக்கு இன்னும் தாமதப்படுத்தினால் மாணவர்கள் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று இருக்கின்றார்கள்.