தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அமைச்சரவை மாற்றப்படும் என்று பேச்சு கிளம்பி கொண்டே இருக்கிறது. ஆனால் இதுவரை அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் கட்சிக்கு அதிருப்திகரமாக செயல்படும் சில அமைச்சர்களை தூக்கி விட்டு அதற்கு பதிலாக புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் கூறி வருகிறார்கள். இதனையடுத்து கூடிய விரைவில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் சிறப்பான முறையில் கையாண்டதாக அனைவரும் பாராட்டுவதாக தெரிவித்தார். அதோடு எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் மட்டும்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவலால் உதயநிதிக்கு கூடிய விரைவில் அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.