Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு டென்ஷனா….? பாஜகவுக்கு‌ தலையிட உரிமை கிடையாது…. இபிஎஸ் திடீர் அதிரடி….. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை  எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும் அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அதிமுக கட்சியின் ஒற்றுமை குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் இபிஎஸ் பெரும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், எனக்காவது டென்ஷன் ஆவது என்று கேட்கும்படியாக இபிஎஸ் இன்று பேட்டி கொடுத்துள்ளார். அதாவது அதிமுக கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியில் இணைக்க முடியாது என்றும், ஒரு கட்சி விவகாரத்தில் மற்றொரு கட்சி தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்றும் இபிஎஸ் கூறியுள்ளார்.

இவர் ஒரு கட்சி விவகாரத்தில் தலையிடுவதற்கு மற்றொரு கட்சிக்கு உரிமை கிடையாது என்று சொன்னது பாஜகவை என்றும், அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறியது ஓபிஎஸ்-ஐ என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் இந்த பேட்டியால் ஓபிஎஸ் தற்போது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது .

Categories

Tech |