Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி காலிபிளவர் 65  கடையில வாங்காதீங்க ….வீட்டிலேயே செய்து அசத்துங்க ….

காலிபிளவர் 65 

தேவையான பொருட்கள் :

காலிபிளவர் – 1

மைதா –  2  ஸ்பூன்

சோளமாவு –  5  ஸ்பூன்

அரிசி மாவு –  3  ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன்

கரம் மசாலா – 1/2 ஸ்பூன்

65 மசாலா –  1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை,  மல்லி இலை  – தலா 1  கைப்பிடியளவு

பச்சை மிளகாய் –  3

தயிர்  –  1/2  கப்

உப்பு –  தேவைக்கேற்ப

எண்ணெய் –  தேவைக்கேற்ப

காலிபிளவர் 65க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் காலிபிளவரை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கிண்ணத்தில் மைதா  , சோளமாவு , அரிசி மாவு  , மிளகாய்த்தூள் , இஞ்சிபூண்டு விழுது , கரம் மசாலா , 65 மசாலா , கறிவேப்பிலை,  மல்லி இலை  , பச்சை மிளகாய் , தயிர் , உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் . இதில் காலிபிளவரை போட்டு 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , காலிபிளவரை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான காலிபிளவர் 65  தயார் !!!

 

Categories

Tech |