Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாமல் இங்க வரக்கூடாது… மாடு மேய்த்த 2 பேர்… வனச்சரக அலுவலகம் முற்றுகை…!!

தேனி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மலை மாடுகளை மேய்த்த 2 பேரை கைது செய்ததால் மலை மாடு வளர்ப்பு சங்கத்தினர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட பொம்முராஜபுரம் வனப்பகுதியில் அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் குமணன்தொழு பகுதியை சேர்ந்த பழனி(52), மலைச்சாமி(55) ஆகிய 2 பேரும் அங்கு அனுமதியின்றி மலை மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

இதனையறிந்த தேனி மலை மாடு வளர்ப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் 20 க்கும் மேற்பட்டவர்கள் மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு சென்று பழனி மற்றும் மலைசாமியை விடுதலை செய்யுமாறு அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்த இருவரையும் விடுவித்தனர். மேலும் உரிய அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் மாடுகளை மேய்க்க கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |